Thursday, January 5, 2017

இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காதக்காளி இரசம்

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.

பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.

சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.

உடல் பருமன் குறையும்!
100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.

உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.

தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

பார்வை நன்கு தெரிய
இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.

செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காய்ச்சலா? பித்த வாந்தியா?
காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.

ஆஸ்துமாவா?
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் தக்காளிச்சாறு மிக்ஸி மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதில தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு டம்ளரில் உள்ள தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த நன்மையளிக்கும் சிகிச்சை முறை இது.

சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகிவருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும்.

இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்துச் சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதை இது ஜீரணிக்கச் செய்துவிடும். அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும். எனவே உணவைக் குறைவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியைத் தக்காளி இரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாகச் சாப்பிட முடியாது. ஓட்டலுக்கு இந்த முறையால் லாபமும் கிடைக்கும்.

பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.

தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.

ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறே போதும்.

பார்வை நரம்புகள் பலம் பெற
வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளிப் பழத்தையும், தக்காளிச் சாற்றையும் லண்டனின் உள்ள கைஸ் மருத்துவமனை (Guy’s Hospital) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துக் குணப்படுத்தி வருகிறது. இதற்குத் ‘தக்காளி வைத்தியம்’ என்று பெயர்.

தக்காளி தென்னமெரிக்காவில் தோன்றியது. ஐரோப்பியர்களால் ‘காதல் பழம்’ என்று வழங்கப்படுகிறது. உலகில் அதிகம் விளையும் முதல் காய்கறி உருளைக்கிழங்கு, இரண்டாவதாக அதிகம் விளையும் காய்கறி தக்காளி.

பதப்படுத்தப்பட்ட தக்காளி சூஸ் உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படுகிறது.

தக்காளியுடன் துவரம் பருப்பு சேர்த்து பச்சடி செய்து எல்லா வயதினரும் நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாய் திகழலாம்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com