Thursday, January 5, 2017

குழந்தைகள் தினமும் காலை, சாப்பாடு சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லும் போது, ஆரோக்கியம் குறைகிறது. இதன் விளைவு, மூளையின் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, சிந்தனை திறன் மக்கி போகும் அளவுக்கு, குழந்தைகளின் மனநிலை சென்றுவிடும். ஆகவே, கீரைகள்,
பழங்கள், தானியங்களை காலை நேர உணவாக சாப்பிட வைப்பது அவசியம். இதில், வெண்டைக்காய் சாப்பிடுவது சிந்தனையை
அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காயில், கலோரிகள், நார்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ,சி, போலிக் ஆசிட், கால்சியம், அயர்ன், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை சீரம் கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், மாரடைப்பு வருவதையும் குறைக்கின்றது.
வெண்டைக்காயில் பாதிக்கு மேல், கரையத்தக்க நார்சத்து இருக்கிறது. மறு பாதியில், உணவு செரிமானத்துக்குப் பின் கரையாத நார்ச்சத்து இருக்கிறது. இந்த வகை நார் சத்து, குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் புற்றுநோய் வராமல் காக்கிறது.
வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் கோந்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்ட உதவுகிறது.
வெண்டைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி, அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், தினமும் இரவு ஒரு இளம் வெண்டைக்காயை நீரில், ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு, காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com