Thursday, January 5, 2017

ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம். 
இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பற்களை அடிக்கடி பிளீச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையாகும். ஆனால், பற்களின் ஆரோக்கியம் கெட்டுவிடும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன. 
பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தை கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும். 
தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது. கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும். 
உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும். சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.
அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப்பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாத தயிர் மாறிவிடும். 
தயிர், உடலுக்கு அரு மருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும். 
பாலில் லாக்டோ என்ற வேதிப்பொருள் கலந்துள்ளது. தயிரில் இருப்பது, லாக்டொபசில் என்ற வேதிப் பொருள்; இது, ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோறை மட்டுமாவது, உணவாக உட்கொள்ளச் சொல்லி டாக்டர்கள் சொல்ல கேட்டிருக்கலாம். 
பால் கூட வயிற்றை மந்தமாக்கி, ஜீரண சக்தியை குறைக்கும்; ஆனால், தயிர் அப்படியல்ல. அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, ஒரு கப் தயிரில், வெந்தயம் கலந்து சாப்பிட்டால், வயிற்று பொருமல் கட்டுப்படும். பிரியாணி போன்ற உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும், உணவு வகைகளை உண்ணும் போது தான், வயிற்றுக்கு கேடு ஏற்படும்; இதை தவிர்க்கவே, தயிர் உண்கிறோம். 
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக ஜீரணமாகி விடும். சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு, உடலுக்குத் தேவையான வைட்டமின்களை தருகிறது; தயிரும், பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கும் தயிர்தான் சிறந்த மருந்து. 

வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், நமது முன்னோர் எந்த சமையல் என்றாலும், அதில் வெங்காயத்தை சேர்த்து வந்தனர்.
இதோ, வெங்காயத்தின் பிற நன்மைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்: 
வெங்காயம், வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்; இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள், வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம், மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால், நுரையீரல் சுத்தமாகும். 
கீல் வாயு குணமாக வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவி வந்தால் வலி குணமாகும். நறுக்கிய வெங்காயத்தை, முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் சரியாகும். 
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 
ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். வெங்காயத்தை அரைத்து, தொண்டையில் பற்றுப்போட்டால், தொண்டை வலி குறையும். 
பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் உண்ண வேண்டும். இதனால் விஷம் இறங்கும். ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருகினால், சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 
காலையில் வெறும் வயிற்றில் வெங்காயத்தை கடித்து சாப்பிடுவது, பற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம். 
வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் நேரத்துக்காகவும் அடக்கி வைக்கிறோம். இந்த நிலை பெண்களுக்கு, 10 வயது முதலும், ஆண்களுக்கு, 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக, சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. 
அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் என்ற, எனும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (rheumatoid arthritis) ஆரம்ப நிலை. 
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. 
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று, சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை, நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. 
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் இருக்கும் மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழக கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இக்கீரை படர்ந்து கிடக்கும் என்றால், இதன் முக்கியத்துவத்தை பார்த்துக் கொள்ளுங்கள். 
குழந்தைகள் தினமும் காலை, சாப்பாடு சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லும் போது, ஆரோக்கியம் குறைகிறது. இதன் விளைவு, மூளையின் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, சிந்தனை திறன் மக்கி போகும் அளவுக்கு, குழந்தைகளின் மனநிலை சென்றுவிடும். ஆகவே, கீரைகள்,
பழங்கள், தானியங்களை காலை நேர உணவாக சாப்பிட வைப்பது அவசியம். இதில், வெண்டைக்காய் சாப்பிடுவது சிந்தனையை
அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காயில், கலோரிகள், நார்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ,சி, போலிக் ஆசிட், கால்சியம், அயர்ன், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை சீரம் கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், மாரடைப்பு வருவதையும் குறைக்கின்றது.
வெண்டைக்காயில் பாதிக்கு மேல், கரையத்தக்க நார்சத்து இருக்கிறது. மறு பாதியில், உணவு செரிமானத்துக்குப் பின் கரையாத நார்ச்சத்து இருக்கிறது. இந்த வகை நார் சத்து, குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் புற்றுநோய் வராமல் காக்கிறது.
வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் கோந்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்ட உதவுகிறது.
வெண்டைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி, அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், தினமும் இரவு ஒரு இளம் வெண்டைக்காயை நீரில், ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு, காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.

ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.
1) செம்பருத்தி பூவை தினமும் தண்ணீர் , தேன் கலந்து தினமும் கலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்
2) துளசி இலை, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசினால் தேமல் எரிச்சல் குணமாகும்
3) கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து நன்கு மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்
4) வெங்காயத்தையும்,கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் நெஞ்சு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
5) முட்டை வெள்ளை கருவோடு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் வயிற்று வலி நீங்கும்
6) கடலை மாவு,எலுமிச்சை சாறு, பால் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்
7) கோதுமை கஞ்சி, கீரை,பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்
8) கடுக்காய் பொடியைப் பற்பொடி உடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம் , இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்
9) வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கோட்டை போடி, நான்கும் சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்
10) வெந்தையக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்தி பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்
முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் 

முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அல்சர் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

கண்புரை :-

கண்புரை நீடித்தால், அது பார்வையை இழக்கச் செய்யும். இந்த கண்புரையைப் போக்க அறுவரை சிகிச்சை மட்டும் தான் சிறந்த வழி அல்ல. தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம்.

சரும பிரச்சனைகள் :-

முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, சரும பிரச்சனைகள் விரைவில் குணமாக உதவும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆய்வுகளிலும் முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால், அதில் உள்ள ஹிஸ்டிடைன் என்னும் பொருள் நோய்க்கிருமிகளை வலிமையுடன் எதிர்த்துப் போராடி நோய்கள் அண்டுவதைத் தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூளைக்கு நல்லது :-

முட்டைக்கோஸ் ஜூஸ் மூளைக்கு நல்லது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறையும் :-

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

கொலஸ்ட்ரால் குறையும் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஜப்பானிய ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

கல்லீரல் சுத்தமாகும் :-

முட்டைக்கோஸ் ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது பருகி வர கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடும் மேம்படும்.

இரத்த சோகை :-

முட்டைக்கோஸ் ஜூஸில் ஃபோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இரத்த சோகை என்று வரும் போது புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸைப் பருகி வர விரைவில் குணமாகும். 

ஜூஸ் செய்யும் முறை 

* பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். கீழே சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு 1 :-

முட்டைக்கோஸை ஜூஸ் போட பயன்படுத்தும் முன், எப்போதும் அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.

குறிப்பு 2 :-

முட்டைக்கோஸ் ஜூஸ் மூலம் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதனை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும்.

குறிப்பு 3 :-

ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 4 :-

இந்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அதன் தன்மை குறைந்துவிடும்.
உலகில் ஏராளமானோர் டென்சனாகவோ, சோர்வுடனோ, தலை வலி இருக்கும் போதோ, தூக்கம் வருவதைத் தடுக்கவோ பருகும் ஓர் பானம் தான் டீ. இந்த டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. டீயின் சுவையை அதிகரிக்க நாம் இஞ்சி, ஏலக்காய், எலுமிச்சை, தேன், சோம்பு போன்றவற்றை சேர்ப்போம்.
ஆனால் குடிக்கும் டீயின் சுவையை அதிகரிக்கவும், அந்த டீயினால் உடல் ஆரோக்கியம் மேம்படவும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால் நினைக்க முடியாத அளவிலான நன்மைகளைப் பெறலாம். இங்கு டீயின் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
வெல்லத்தில் உள்ள உட்பொருட்கள் குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து தடுக்கும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லை என்றாலோ அல்லது செரிமான பிரச்சனைகள் இருந்தாலோ, டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரத்த சோகை உள்ளவர்கள் குடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரையால் உடலுக்கு தீங்கு தான் விளையும். குறிப்பாக கல்லீரலைத் தான் சர்க்கரை முதலில் பாதிக்கும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலை சுத்தம் செய்யவும். குடிக்கும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள்.
ஒரு கப் சூடான டீயில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சளி, வயிற்று உப்புசம், இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பமாவதற்கு முன் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான மனநிலை இருக்கும். இதனைத் தவிர்க்க தினமும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலம், எண்டோர்பின்கள் வெளியேற்றப்பட்டு, எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கலாம்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காதக்காளி இரசம்

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.

பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.

சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.

உடல் பருமன் குறையும்!
100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.

உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.

தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

பார்வை நன்கு தெரிய
இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.

செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காய்ச்சலா? பித்த வாந்தியா?
காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.

ஆஸ்துமாவா?
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் தக்காளிச்சாறு மிக்ஸி மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதில தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு டம்ளரில் உள்ள தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த நன்மையளிக்கும் சிகிச்சை முறை இது.

சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகிவருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும்.

இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்துச் சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதை இது ஜீரணிக்கச் செய்துவிடும். அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும். எனவே உணவைக் குறைவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியைத் தக்காளி இரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாகச் சாப்பிட முடியாது. ஓட்டலுக்கு இந்த முறையால் லாபமும் கிடைக்கும்.

பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.

தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.

ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறே போதும்.

பார்வை நரம்புகள் பலம் பெற
வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளிப் பழத்தையும், தக்காளிச் சாற்றையும் லண்டனின் உள்ள கைஸ் மருத்துவமனை (Guy’s Hospital) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துக் குணப்படுத்தி வருகிறது. இதற்குத் ‘தக்காளி வைத்தியம்’ என்று பெயர்.

தக்காளி தென்னமெரிக்காவில் தோன்றியது. ஐரோப்பியர்களால் ‘காதல் பழம்’ என்று வழங்கப்படுகிறது. உலகில் அதிகம் விளையும் முதல் காய்கறி உருளைக்கிழங்கு, இரண்டாவதாக அதிகம் விளையும் காய்கறி தக்காளி.

பதப்படுத்தப்பட்ட தக்காளி சூஸ் உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படுகிறது.

தக்காளியுடன் துவரம் பருப்பு சேர்த்து பச்சடி செய்து எல்லா வயதினரும் நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாய் திகழலாம்.
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம், கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களை தடுக்கிறது.
* வெல்லம் கரைத்த நீரில், சுக்கைத் தட்டிப் போட்டு, எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள், கோடை வெயிலுக்கு நல்லது.
* வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி, ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, தர்பூசணி பழத் துண்டுகளை சேர்த்து அருந்தினால், உடல் உஷ்ணம் குறையும்.
* கோடையில் ஏற்படும் நீர் கடுப்பு குறைய, எலுமிச்சை சாறில், நல்லெண்ணெய் கலந்து குடிக்க குணமாகும்.
* எலுமிச்சை சாறு, பித்தத்தை குறைக்கும்.
* சோற்றுக் கற்றாழையுடன், எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், சரும பிரச்னை தீரும். குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளித்தாலும் சரும நோய் அண்டாது.
* தினமும் இரு வேளை லெமன் டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்.
* பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்.
அற்புத சத்துக்களை உள்ளடக்கிய பீட்ரூட் - இயற்கை மருத்துவம்
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
10. புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
11. மலச்சிக்கலைப் போக்கும்.
12. பித்தத்தைக் குறைக்கும்
13. அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
14. கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் காெண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை பாேக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால்
முருங்கைக்கீரை சாற்றில் உப்பு ேபாட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தாெடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நாேய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நினமும் எடுத்துக் காெள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றாேர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும்.சோகையை பாேக்கும்.
புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை ெவங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் ெதரியும்.
குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் பாேக்கை குறைக்கும்.
சிறுகீரை - உடல் தளர்ச்சியை பாேக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலை போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை - முருங்டகை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ைண
ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது,பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை : நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவிகளை முறியடிக்கும், தேமல், சாெறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி
உணவுப்பழக்கத்தில் ேசர்த்துக் ெகாண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை ; வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துக்களையும் உடையது இந்தக் கீரைதான்.குடல் குருதியை தூய்மைப்படுத்தும், குடற்புழுவை கொல்லும், பித்தத்ைத தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்ைறப் ேபாக்கும், உடலில் எந்த வகையில் விஷம் ேசர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
பசலக்கீரை -பருப்புக்கீரை /
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணாெளி தரும்.
மணத்தக்காளி கீரை - அல்சரை ஆற்றுவதில் முதன்ைமயானது, குடலுக்கு பலமளிப்பது,பெண்மையை வளர்ப்பது, மங்ைகயருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைபட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை - உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் ேபாக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நாேய்களுக்கு நல்லது.
குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்ைமப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.
தொய்யல் கீரை - தொய்ந்து போன நாடி நரம்புகைள வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை பாேக்கும், வாத நாேயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.
மருந்துக்கு பதில் கீரை வாங்கி சாப்பிடுங்கள்
காய்கறி வகைகளில் கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் ெசன்று அதிக விலையில் சத்து மருந்துகைள வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் பாேதும்.
தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுகளுக்கு இடமே இல்லை.
அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பாெக்கிஷமாக பாெதிந்து கிடக்கின்றன.
கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்ததைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்ைதகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால்
தாெட்டு கூட பார்ப்பதில்லை. இதை பொற்றாேர்தான் மாற்ற வேண்டும்.
சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.கீரை உணவு எந்தளவுக்கு சா்பிடுகிறோமோ அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன.
ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது. இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது. செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.
செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது. உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.
மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.
செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது. தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.
பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
செப்பு=செம்பு= தாமிரம்(உலோகத்தனிமம்)
துத்தநாகம்= தனிமம்
காரீயம்= தனிமம்
தாமிரம்+துத்தநாகம்= பித்தளை(உலோகக்கலவை)
தாமிரம்+காரீயம்= வெண்கலம்(உலோகக்கலவை)
வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள் - தெரிந்துகொள்வோம்
நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.
* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.
* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.
* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.
* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.
* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.
* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.
* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
- மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

ஐயா தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உன்னாதீர்கள் மன்னிக்கவும் யாரும் உன்னவேண்டாம் மன்னிக்கவும் நாயிர்க்கு கூட குடுக்கவேண்டாம்sugar disease is a slow poison இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்திஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள்யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால்இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.1. கரும்பிலிருந்துசாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.This is true so Can we avoid
டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.
நண்பர்களே இன்றய ஊடகங்களால்மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!நண்பர்களே (முக்கியம்)படித்துவிட்டு பகிருங்கள


நீரழிவு மற்றும் பல (ரத்த கொதிப்பு, இதய நோய் குணமாக ஹீலர் பாஸ்கர் கூறியதைப்போல் உணவு உண்பதனால் படிப்படியாக நோய் குறைவதை நீங்களே உணர முடியும்.
உணவு உண்ணும் முறை ;
1) குளித்து சுமார் முக்கால் மணி நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டும்.
2) சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாகவும் சாப்பிடும் பொழுதும் சாப்பிட்ட அரை மணி நேரம் பின்பும் (மொத்தம் 1 -1/2மணி நேரம்) தண்ணீர் குடிக்க கூடாது. 1-1/2 மணி நேரம் கழித்து நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
3) சாப்பிடும் பொழுது பேசவோ, டிவி பார்க்கவோ, புத்தகம் படிக்கவோ கூடாது. அதாவது முழு கவனமும் சாப்பாட்டில் மட்டும் இருக்க வேண்டும்.
4) சாப்பிடும் பொழுது வாயை மூடிக்கொண்டு, நன்கு கூலாகும்படி மென்று சாப்பிட வேண்டும்.
5) கூடுமானவரை அறுசுவையும்(இனிப்பு, புளிப்பு, , கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, மற்றும் கசப்பு,).
 இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது)
இருக்கும்படிப்பார்த்துக்கொண்டால் மிக்க நலம். அல்லது தினமும் நெல்லிக்காயை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம் .
Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com