Thursday, January 5, 2017

அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப்பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாத தயிர் மாறிவிடும். 
தயிர், உடலுக்கு அரு மருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும். 
பாலில் லாக்டோ என்ற வேதிப்பொருள் கலந்துள்ளது. தயிரில் இருப்பது, லாக்டொபசில் என்ற வேதிப் பொருள்; இது, ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோறை மட்டுமாவது, உணவாக உட்கொள்ளச் சொல்லி டாக்டர்கள் சொல்ல கேட்டிருக்கலாம். 
பால் கூட வயிற்றை மந்தமாக்கி, ஜீரண சக்தியை குறைக்கும்; ஆனால், தயிர் அப்படியல்ல. அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, ஒரு கப் தயிரில், வெந்தயம் கலந்து சாப்பிட்டால், வயிற்று பொருமல் கட்டுப்படும். பிரியாணி போன்ற உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும், உணவு வகைகளை உண்ணும் போது தான், வயிற்றுக்கு கேடு ஏற்படும்; இதை தவிர்க்கவே, தயிர் உண்கிறோம். 
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக ஜீரணமாகி விடும். சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு, உடலுக்குத் தேவையான வைட்டமின்களை தருகிறது; தயிரும், பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கும் தயிர்தான் சிறந்த மருந்து. 

0 comments:

Post a Comment

Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com