Sunday, December 7, 2014

தேவை: 

         பெரிய நெல்லிக்காய் -அரை கிலோ 
         வெல்லம் - கால்  கிலோ 
         தேன் - 3 ஸ்பூன் 
         எண்ணெய் -4 டீஸ்பூன் 

செய்முறை:

          பெரிய நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துடைத்துவிட்டு வைக்கவும். வாணலியில் எண்ணை  விட்டு குறைந்த தீயில் நெல்லிக்காயை வதக்கவும்.  நெல்லிக்காய்  மாறிச் சுருங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். நெல்லிக்காய் ஆறியதும் அதன் மேல் உள்ள எண்ணையை மெல்லிய பருத்தி துணியால் ஒற்றியெடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை  நசுக்கிப் போட்டு 1 கப் தண்ணிர் சேர்த்துக் கொதிக்க விடவும்.  ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்ததும் இறக்கிவைத்து, தேன், நெல்லிக்காய்களைச் சேர்க்கவும். இருண்டு நாளில் வெல்லம், நெல்லிக்காயில்   நன்றாக ஊறியதும், பல நாட்கள்வரை கெடாமல் இருக்கும்.
Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com