Thursday, January 5, 2017

ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம். 
இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பற்களை அடிக்கடி பிளீச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையாகும். ஆனால், பற்களின் ஆரோக்கியம் கெட்டுவிடும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன. 
பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தை கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும். 
தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது. கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும். 
உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும். சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.
அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப்பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாத தயிர் மாறிவிடும். 
தயிர், உடலுக்கு அரு மருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும். 
பாலில் லாக்டோ என்ற வேதிப்பொருள் கலந்துள்ளது. தயிரில் இருப்பது, லாக்டொபசில் என்ற வேதிப் பொருள்; இது, ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோறை மட்டுமாவது, உணவாக உட்கொள்ளச் சொல்லி டாக்டர்கள் சொல்ல கேட்டிருக்கலாம். 
பால் கூட வயிற்றை மந்தமாக்கி, ஜீரண சக்தியை குறைக்கும்; ஆனால், தயிர் அப்படியல்ல. அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, ஒரு கப் தயிரில், வெந்தயம் கலந்து சாப்பிட்டால், வயிற்று பொருமல் கட்டுப்படும். பிரியாணி போன்ற உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும், உணவு வகைகளை உண்ணும் போது தான், வயிற்றுக்கு கேடு ஏற்படும்; இதை தவிர்க்கவே, தயிர் உண்கிறோம். 
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக ஜீரணமாகி விடும். சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு, உடலுக்குத் தேவையான வைட்டமின்களை தருகிறது; தயிரும், பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கும் தயிர்தான் சிறந்த மருந்து. 

வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், நமது முன்னோர் எந்த சமையல் என்றாலும், அதில் வெங்காயத்தை சேர்த்து வந்தனர்.
இதோ, வெங்காயத்தின் பிற நன்மைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்: 
வெங்காயம், வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்; இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள், வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம், மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால், நுரையீரல் சுத்தமாகும். 
கீல் வாயு குணமாக வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவி வந்தால் வலி குணமாகும். நறுக்கிய வெங்காயத்தை, முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் சரியாகும். 
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 
ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். வெங்காயத்தை அரைத்து, தொண்டையில் பற்றுப்போட்டால், தொண்டை வலி குறையும். 
பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் உண்ண வேண்டும். இதனால் விஷம் இறங்கும். ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருகினால், சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 
காலையில் வெறும் வயிற்றில் வெங்காயத்தை கடித்து சாப்பிடுவது, பற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம். 
வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் நேரத்துக்காகவும் அடக்கி வைக்கிறோம். இந்த நிலை பெண்களுக்கு, 10 வயது முதலும், ஆண்களுக்கு, 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக, சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. 
அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் என்ற, எனும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (rheumatoid arthritis) ஆரம்ப நிலை. 
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. 
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று, சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை, நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. 
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் இருக்கும் மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழக கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இக்கீரை படர்ந்து கிடக்கும் என்றால், இதன் முக்கியத்துவத்தை பார்த்துக் கொள்ளுங்கள். 
குழந்தைகள் தினமும் காலை, சாப்பாடு சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லும் போது, ஆரோக்கியம் குறைகிறது. இதன் விளைவு, மூளையின் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, சிந்தனை திறன் மக்கி போகும் அளவுக்கு, குழந்தைகளின் மனநிலை சென்றுவிடும். ஆகவே, கீரைகள்,
பழங்கள், தானியங்களை காலை நேர உணவாக சாப்பிட வைப்பது அவசியம். இதில், வெண்டைக்காய் சாப்பிடுவது சிந்தனையை
அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காயில், கலோரிகள், நார்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ,சி, போலிக் ஆசிட், கால்சியம், அயர்ன், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை சீரம் கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், மாரடைப்பு வருவதையும் குறைக்கின்றது.
வெண்டைக்காயில் பாதிக்கு மேல், கரையத்தக்க நார்சத்து இருக்கிறது. மறு பாதியில், உணவு செரிமானத்துக்குப் பின் கரையாத நார்ச்சத்து இருக்கிறது. இந்த வகை நார் சத்து, குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் புற்றுநோய் வராமல் காக்கிறது.
வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் கோந்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்ட உதவுகிறது.
வெண்டைக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி, அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், தினமும் இரவு ஒரு இளம் வெண்டைக்காயை நீரில், ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு, காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.

ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.
1) செம்பருத்தி பூவை தினமும் தண்ணீர் , தேன் கலந்து தினமும் கலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்
2) துளசி இலை, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசினால் தேமல் எரிச்சல் குணமாகும்
3) கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து நன்கு மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்
4) வெங்காயத்தையும்,கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் நெஞ்சு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
5) முட்டை வெள்ளை கருவோடு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் வயிற்று வலி நீங்கும்
6) கடலை மாவு,எலுமிச்சை சாறு, பால் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்
7) கோதுமை கஞ்சி, கீரை,பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்
8) கடுக்காய் பொடியைப் பற்பொடி உடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம் , இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்
9) வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கோட்டை போடி, நான்கும் சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்
10) வெந்தையக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்தி பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்
Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com