Sunday, January 24, 2016

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து,
"குருவே! நான் பெரும் ஏழை.
என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.
நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு குரு அவனிடம்,
"நான் 5000 தருகிறேன், உன் கைகளை
என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.
அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.
"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,
உன் கால்களை கொடு" என்றார்.
அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன்,
உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.
அதற்கும் அவன் முடியாது என்றான்.
உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,
உன் உயிரைக் கொடு என்றார்.
அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள்
சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.
அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,
"உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.
விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க...
--இணையத்திலிருந்து
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
--இணையத்திலிருந்து
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
--இணையத்திலிருந்து
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
--இணையத்திலிருந்து
ஒரு தத்துவஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார். “எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும், பூகோளம் எல்லாம் தெரியாது” என்றான் படகுக்காரன். வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவஞானி. சற்றுத் தூரம் போனவுடன், “சரித்திரம் தெரியுமா” என்று கேட்டார். ” அதுவும் எனக்குத் தெரியாது” என்றான் படகுக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். பிறகு அவனைப் பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார். “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா, எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்” என்றான் படகுக்காரன். “முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர். அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது.. “சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று படகுக்காரன் கேட்டான். “தெரியாது” என்றார் அந்த தத்துவ ஞானி. “இப்பொழுது உங்கள் உயிரை அல்லவா நீங்கள், இழக்கப் போகிறீர்கள்”, எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்துக் கரை சேர்ந்தான். தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிர் துறந்தார்.. நீதி> தத்துவம் உயிரைக் காப்பாத்தாது…!!
--இணையத்திலிருந்து
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.
சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.
உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.
ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.
பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.
நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.
இணையத்திலிருந்து
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலை க்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.
ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.
மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின் செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்” என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில் அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.
சிப்பாய்களில் ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய் வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம் வாங்கப்பட்டது.
மதன் மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
(1916 ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)
மாளவியாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில் பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.
பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும், சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய் இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும், பின்னடைவுகளையும் பெரிதுபடுத்தும் தன்மை இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.
தங்களை முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள். எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும் நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.
இணையத்திலிருந்து
நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.
அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?"
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....
பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.
அவனுக்கு அவமானமாகி விட்டது.
அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னால்
"நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்"
இளைஞன் உரக்ககச் சொன்னான்.
என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.
அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!
நீதி :
ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.
ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..
அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்..
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..
அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..
”நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்..வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது..
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை .. என்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..
கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்..
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்..
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். _அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது...

இணையத்திலிருந்து
குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?
வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான்.
அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.
சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ்.
கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.
தடுமாறிப் போன அந்த இளைஞன் காற்றுக்காகவும், தலையை வெளியே எடுக்கவும் போராடினான். நீரிலிருந்து வெளியே வர மிகவும் பிரயத்தனப்பட்டான்.
சற்று நேரம் கழித்து அவன் தலையை வெளியே இழுத்த சாக்ரடீஸ் அவன் ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொள்ளும்வரை காத்திருந்துவிட்டு பிறகு கேட்டார்.
“இப்போதைய இந்த சூழலில் எதைப் பெற நீ பெரிதும் போராடினாய்?”
“காற்றைப் பெற போராடினேன்” என பதில் சொன்ன அந்த இளைஞனை முழுமையாக விடுவித்து விட்டு புன்னகையுடன் சாக்ரடீஸ் கூறினார்,
“இதுதான் வெற்றியின் இரகசியம்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலை க்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.
ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.
மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின் செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்” என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில் அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.
சிப்பாய்களில் ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய் வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம் வாங்கப்பட்டது.
மதன் மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
(1916 ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)
மாளவியாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில் பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.
பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும், சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய் இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும், பின்னடைவுகளையும் பெரிதுபடுத்தும் தன்மை இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.
தங்களை முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள். எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும் நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.
ஓர் ஊரில் வேலு என்பவன் கூலித் தொழில் செய்து கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நிம்மதியாக நடத்திவந்தான். அவனிடம் சொந்தமாக ஒரு மாட்டுவண்டி இருந்தது. ராமு, சோமு அவனது மாட்டு வண்டி காளைகள்.
வேலு தன் மாட்டுவண்டியில் நிறைய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். கிரமாத்திற்க்கு அருகில் உள்ள ரைசில் மில் ஒன்றில் அனைத்து மூட்டைகளையும் இறக்கினார்.
சோமு முகத்தில் சந்தோஷம் கரை பரண்டு ஓடியது. அதை கவனித்த ராமு, ‘என்ன சோமு என்றைக்கும் இல்லாமல் இன்று உன் முகம் சந்தோஷமாக இருக்குதே, என்ன காரணம்?’ என்று கேட்டது.
‘ராமு இன்னும் இரண்டு நாளில் மாட்டுப் பொங்கல் திருவிழா வருகிறது. நமக்கு விதவிதமான விருந்து படைப்பார்கள். நம் கொம்புகளுக்கு எல்லாம் பெயிண்ட் பூசி, மாலை போட்டு நம்மை எல்லோரும் கை கூப்பி கும்பிடுவாங்க. அதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கு’ என்றது சோமு.
‘ஆமாம், ஆமாம்... பொங்கல் வரப் போகுதுல்ல. மாட்டுப்பொங்கல் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று ஆமோதித்தது ராமு.
வேலு, மூட்டைகளை இறக்கிவிட்டு கூலி வாங்கினான். அந்தப் பணத்தில் பிள்ளைகளுக்கு கரும்புக் கட்டும், மஞ்சள்குலையும் வாங்கிக் கொண்டான். பொங்கல் பொருட்களும் பைநிறைய வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். காளைகளும் சந்தோஷமாக புறப்பட்டன.
மறுநாள் வேலு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டான். மறுநாள் மாட்டுப் பொங்கல் என்பதால் அன்று மாலையே வேலு மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசிக் கொண்டு இருந்தான். சோமுவுக்கு வர்ணம் தீட்டி முடித்த சமயத்தில், விவசாயி கோவிந்தன் அழுது கொண்டே வேலுவைத் தேடி வந்தான். “ஏண்டா கோவிந்தா ஏன் அழுதுகிட்டே வர்றே?” என்றார் வேலு.
“அய்யா என் மனைவிக்கு திடீர்னு பிரசவ வலி வந்திடுச்சி. துடியா துடிக்கிறா? இந்த நேரத்தில் நம்ம ஊர் வழியா பஸ் கிடையாது, என்ன செய்றதுன்னே புரியல. அதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான் கோவிந்தன்.
“சரி பதட்டப்படாதம இரு. நான் வண்டியை பூட்டுகிறேன். சீக்கிரம் கிளம்பிடலாம்” என்றான் வேலு.
“சரிங்கய்யா” என்ற கேவிந்தன் வந்த வேகத்தில் திரும்பி ஓடினானா.
வேலு, காளைகளை வண்டியில் பூட்ட தயாரானான். ராமு உடனே கிளம்பியது. ஆனால் சோமுவோ அடம்பிடித்தது கிளம்ப மறுத்தது.
அப்போது ராமு சோமுவிடம், ஏன் வர மறுக்கிறாய்? என்று கேட்டது.
‘விடிந்தால் மாட்டுப் பொங்கல், நம்மை எல்லோரும் கொண்டாடுவாங்க. நாம அங்கே போனால் அதெல்லாம் கிடைக்காது’ என்றது சோமு.
“திமிர் பிடித்தவன், உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்” என்று வேலு கோபத்தில் சோமுவைத் திட்டினான்.
ஒற்றை மாட்டை வண்டியில் பூட்டுவதென்று முடிவு செய்து, ராமுவை மட்டும் வண்டியில் பூட்டி வண்டியை கிளப்பினான். கோவிந்தனையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு பக்கத்து ஊர் அரசு ஆஸ்பித்திரிக்கு வண்டி புறப்பட்டது.
ஒற்றைக் காளை பூட்டிய வேலுவின் வண்டி, ‘ஜல் ஜல்’ மணியோசையுடன் குதிரை வண்டிபோல வேகமெடுத்தது. நல்லபடியா கோவிந்தன் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது. மறுநாள் மாலையில்தான் ராமு வீடு திரும்பியது.
சோமு, ராமுவைப் பார்த்தது, “அடுத்தவனுக்காக உதவப்போன உனக்கு மாலை மரியாதை எதுவும் கிடைக்கலே. அதனால்தான் நான் வரமாட்டேன் என்று சொன்னேன்” எனறு பெருமைப்பட்டது சோமு.
அதற்கு சோமு, “இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதுதான் எனக்கு சந்தோஷம் அதனால் எத்தனை பேரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறேன் தெரியுமா? அது தனிப்பட்ட உன்னுடைய சந்தோஷத்தைவிட பல மடங்கு உயர்ந்தது” என்றது ராமு.
சோமு அவமானத்தில் தலையை குனிந்து கொண்டது.
அன்பு நண்பர்களே ..
தன்னுடைய சந்தோஷத்தைவிட மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே உயர்ந்தது.

மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள், மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.
இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார். ""தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?'' என்று கேட்டார். ""திருடச் செல்கிறேன்,'' என்றான் அவன். "திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா,'' என்று கேட்டார் அரசர்.
"திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார்.
அவரின் நினைவாக, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்,'' என்றான் திருடன். "தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்குத் தரவேண்டும்,'' என்றார் அரசர்.
திருடனும் ஒப்புக் கொண்டான்.
அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர். கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான். "கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன. மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று,'' என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.
மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர். "அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன,'' என்றார். "மூன்று வைரங்களுமா திருடு போய்விட்டன?'' என்று கேட்டார் அரசர். "ஆம். அரசே,'' என்றார் அமைச்சர். "திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான். எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்,'' என்று நினைத்தார் அரசர்.
வீரர்களை அழைத்த அவர், "அமைச்சரைச் சோதனை இடுங்கள்,'' என்று கட்டளை இட்டார். வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர். "வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய இளைஞன் இருப்பான். அவனை அழைத்து வாருங்கள்,'' என்று கட்டளை இட்டார். அவர்களும் அவனை அழைத்து வந்தனர். அரியணையில் வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான். என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான்.
"அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாகவும் நடந்து கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர். பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்” என்ற மன்னர், “இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு.
உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்,'' என்றார். "அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்,'' என்றான் திருடன். அவனை பாராட்டி, அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்
என் அன்பான மாணவர்கள் மற்றும் இளைஞர்களே:

1. எனது மறைவுக்கு பின் யாரும் வருத்தப்படாதீர்கள்.
2. இந்திய நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லுங்கள்.
3. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓர் நல்ல அறிவுசார்ந்த புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். உலக வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
4. உங்களிடம் இருக்கும் தனி திறமைகளும், உங்களுக்கு தெரிந்த சில அறிவுசார்ந்த தகவல்களும், மற்றவர்களுடம் பகிர்ந்துகொள்ளுங்கள்..
5. ஜாதி, மதம், இனம், வேற்றுபாடு இன்றி அனைவர்களிடமும் பழகி அன்பு செலுத்துங்கள்.
6. உங்களால் முடிந்த வரை, இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
7. மரத்தை வெட்டும் சூழ்நிலை வந்தால் மட்டும், பதிலுக்கு ஒரு மரத்தை நடுங்கள்.
8. உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடு பார்த்துக் கொள்ளுங்கள்.
9. உலகின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியதுவம் கொடுங்கள்..
10. கனவு காணுங்கள். கண்ட கனவை செயல்படுத்துங்கள். வல்லரசு இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதற்கு என் வாழ்த்துக்கள்..
இவைகள் அனைத்தும் தவறாமல் தினமும் நீங்கள் செய்து வந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்துல் கலாம் தான்.. இதுவே நீங்கள் எனக்கு செய்யும் பெரும் உதவியும் மரியாதையும்.
சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.
கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.
முனிவர் ஒருவரிடம் சீடராகச்  சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள்
தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது தமது மனைவிடம் 
காதில் ஓணான் புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார். மறுநாள்
அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவ்வாறே சொன்னார்.

முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!"
என்று வருத்ததோடு கூறிவிட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!"
என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர்
ஆணித்தரமாக. "முனிவர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான். அதுவரை
வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளிப்பட்டார்.

"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.

"அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின்
முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது
என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.
விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்
முனிவர்.

எனவே வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்
                    

Tuesday, January 5, 2016

பிளாகர் முகப்பில், "இப்போதே வலைப்பதிவை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்து, Google கணக்கு உருவாக்கவும். நீங்கள் முன்பே orkut, Google குழுக்கள், Gmail மற்றும் வேறு ஏதேனும் Google தயாரிப்புகளை பயன்படுத்தியிருந்தால், உங்களிடம் Google கணக்கு இருக்கும் - அப்படியென்றால், நீங்கள் நேரடியாக உள்நுழையலாம். பின்னர், காட்சிப் பெயரைத் தேர்வுசெய்து, பிளாகரின் சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்க. இவை அனைத்தும் முடிந்ததும், வலைப்பதிவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்!
பிளாகர் கணக்கை நீங்கள் உருவாக்கியதும், www.blogger.com இல் உள்நுழைந்து "வலைப்பதிவை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்க. 2 ஆம் படியில், உங்கள் வலைப்பதிவிற்கான தலைப்பு, முகவரியை (URL) உள்ளிடுக. சொல் சரிபார்ப்புப் பெட்டியில் எழுத்துக்களைத் தட்டச்சு செய்து, நீங்கள் இயந்திரம் அல்ல மனிதர்தான் என்பதை உறுதிசெய்க, அடுத்து "தொடர்க" என்பதைக் கிளிக் செய்க. 3 ஆம் படியில், உங்கள் வலைப்பதிவிற்கான டெம்ப்ளேட்டை தேர்வுசெய்யலாம்; உங்கள் வாசகர்களுக்கு இப்படித்தான் வலைப்பதிவு காண்பிக்கப்படும். உங்களுக்கான புதிய வலைப்பதிவை பிளாகர் உருவாக்கிவிடும். இது 2 ஆம் படியில் நீங்கள் தேர்வுசெய்த முகவரியில் தோன்றும்.
உங்கள் Dashboard இல், நீங்கள் இடுகையிட விரும்பும் வலைப்பதிவிற்கு அடுத்து உள்ள "புதிய இடுகை" என்பதைக் கிளிக் செய்க. வலைப்பதிவிற்கு ஒரு தலைப்பை (விரும்பினால்) வழங்கி, இடுகையை உள்ளிடுக. பிறகு, முன்னோட்டத்தை "மாதிரிக்காட்சி" இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் காணலாம். உங்கள் இடுகையை வெளியிடலாம் என்ற முடிவிற்கு வந்தபின்னர், "வெளியிடு" என்பதைக் கிளிக் செய்க.
இடுகைத் திருத்தியின் கருவிப்பட்டியில் உள்ள பட ஐகானைப் பயன்படுத்தி புகைப்படங்களை நீங்கள் பதிவேற்றலாம். இந்த ஐகானை நீங்கள் கிளிக் செய்யும்போது, உங்கள் கணினியிலிருந்து ஒரு படம் அல்லது பல படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சாளரம் காண்பிக்கப்படும். உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிய, "உலாவு" என்பதைக் கிளிக் செய்தால் போதும். மாறாக, ஏற்கனவே ஆன்லைனில் இருக்கும் படத்தை உங்கள் இடுகையில் செருகுவதற்கு அதன் URL ஐ நீங்கள் உள்ளிடலாம். உங்கள் இடுகையில் படங்கள் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்க, தளவமைப்பைத் தேர்வு செய்வதற்கான இணைப்பை நீங்கள் கிளிக் செய்க. படங்களைச் சுற்றி, இடுகையின் உரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இடது, மையம், வலதுபுறம் போன்றவை தீர்மானிக்கும். இடுகையிடும் பகுதிக்குள்ளே, வெவ்வேறான அளவுகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க அளவு என்ற விருப்பம் உதவும்.
முதலில், உங்கள் டாஷ்போர்டில் உள்ள "சுயவிவரத்தைத் திருத்து" என்ற இணைப்பைக் கிளிக் செய்க. "புகைப்படம்" என்ற பிரிவுக்கு கீழ்நோக்கி உருட்டி செல்க, அதில், உங்கள் கணினியிலிருந்து கோப்பைத் தேர்வு செய்யலாம் அல்லது, உங்களுக்கு தேவையான புகைப்படம் ஆன்லைனில் இருந்தால் அதன் URL ஐ உள்ளிடலாம். படத்தின் அளவு 50k அல்லது அதைவிடச் சிறிய அளவில் இருக்கவேண்டும்.
உங்கள் வலைப்பதிவின் தலைப்பு பிளாகரின் அமைப்புகள் | அடிப்படை
 தாவலில் அமைக்கப்பட்டபடி, வெளியிடப்பட்ட வலைப்பதிவில், Dashboard இல் மற்றும் சுயவிவரத்தில் என பல இடங்களில் தோன்றும். ஆக்கப்பூர்வமாக படைத்திடுங்கள்!
URL என்பது, வலையில் உள்ள ஏதேனும் ஒரு கோப்பின் முகவரியாகும், எடுத்துக்காட்டுwww.example.com, அல்லது foo.example.com. வலைப்பதிவை உருவாக்கும் செயலாக்கத்தின்போது, உங்கள் வலைப்பதிவிற்கான URL ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலாவி முகவரிப்பட்டியில், இந்த URL ஐத் தட்டச்சு செய்வதன் மூலம் உங்கள் வலைப்பதிவைப் பார்வையாளர்கள் அணுகலாம். முன்பே மிக அதிகளவிலான Blogspot வலைப்பதிவுகள் உள்ளதால், இருக்கக்கூடிய ஒன்றைக் கண்டறிவதற்கு முன், வித்தியாசமான வேறுபட்ட சில URLகளை நீங்கள் முயற்சிக்கலாம். உங்கள் URL இன் வடிவமைப்பு nameyouchoose.blogspot.com போல இருக்கும். உங்கள் வலைப்பதிவின் URL ஐத் தேர்ந்தெடுக்கும்போது, எழுத்துக்கள், எண்கள் மற்றூம் சிறுகோடுகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். $, #, &, போன்ற சிறப்பு எழுத்துக்குறிகள் அனுமதிக்கப்படாது.
தனிப்பயன் டொமைனிலும் நீங்கள் வலைப்பதிவை ஹோஸ்ட் செய்யலாம்.

6)6


Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com