Thursday, January 5, 2017

உலகில் ஏராளமானோர் டென்சனாகவோ, சோர்வுடனோ, தலை வலி இருக்கும் போதோ, தூக்கம் வருவதைத் தடுக்கவோ பருகும் ஓர் பானம் தான் டீ. இந்த டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. டீயின் சுவையை அதிகரிக்க நாம் இஞ்சி, ஏலக்காய், எலுமிச்சை, தேன், சோம்பு போன்றவற்றை சேர்ப்போம்.
ஆனால் குடிக்கும் டீயின் சுவையை அதிகரிக்கவும், அந்த டீயினால் உடல் ஆரோக்கியம் மேம்படவும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால் நினைக்க முடியாத அளவிலான நன்மைகளைப் பெறலாம். இங்கு டீயின் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
வெல்லத்தில் உள்ள உட்பொருட்கள் குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து தடுக்கும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லை என்றாலோ அல்லது செரிமான பிரச்சனைகள் இருந்தாலோ, டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரத்த சோகை உள்ளவர்கள் குடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரையால் உடலுக்கு தீங்கு தான் விளையும். குறிப்பாக கல்லீரலைத் தான் சர்க்கரை முதலில் பாதிக்கும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலை சுத்தம் செய்யவும். குடிக்கும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள்.
ஒரு கப் சூடான டீயில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சளி, வயிற்று உப்புசம், இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பமாவதற்கு முன் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான மனநிலை இருக்கும். இதனைத் தவிர்க்க தினமும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலம், எண்டோர்பின்கள் வெளியேற்றப்பட்டு, எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கலாம்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com