Thursday, January 5, 2017

முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் காெண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை பாேக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால்
முருங்கைக்கீரை சாற்றில் உப்பு ேபாட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தாெடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நாேய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நினமும் எடுத்துக் காெள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றாேர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும்.சோகையை பாேக்கும்.
புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை ெவங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் ெதரியும்.
குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் பாேக்கை குறைக்கும்.
சிறுகீரை - உடல் தளர்ச்சியை பாேக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலை போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை - முருங்டகை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ைண
ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது,பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை : நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவிகளை முறியடிக்கும், தேமல், சாெறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி
உணவுப்பழக்கத்தில் ேசர்த்துக் ெகாண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை ; வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துக்களையும் உடையது இந்தக் கீரைதான்.குடல் குருதியை தூய்மைப்படுத்தும், குடற்புழுவை கொல்லும், பித்தத்ைத தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்ைறப் ேபாக்கும், உடலில் எந்த வகையில் விஷம் ேசர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
பசலக்கீரை -பருப்புக்கீரை /
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணாெளி தரும்.
மணத்தக்காளி கீரை - அல்சரை ஆற்றுவதில் முதன்ைமயானது, குடலுக்கு பலமளிப்பது,பெண்மையை வளர்ப்பது, மங்ைகயருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைபட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை - உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் ேபாக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நாேய்களுக்கு நல்லது.
குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்ைமப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.
தொய்யல் கீரை - தொய்ந்து போன நாடி நரம்புகைள வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை பாேக்கும், வாத நாேயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.
மருந்துக்கு பதில் கீரை வாங்கி சாப்பிடுங்கள்
காய்கறி வகைகளில் கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் ெசன்று அதிக விலையில் சத்து மருந்துகைள வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் பாேதும்.
தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுகளுக்கு இடமே இல்லை.
அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பாெக்கிஷமாக பாெதிந்து கிடக்கின்றன.
கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்ததைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்ைதகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால்
தாெட்டு கூட பார்ப்பதில்லை. இதை பொற்றாேர்தான் மாற்ற வேண்டும்.
சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.கீரை உணவு எந்தளவுக்கு சா்பிடுகிறோமோ அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 தென்றல் | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com